இரண்டு நாட்களுக்கு மூடப்படும் வீதி: சாரதிகளுக்கான அறிவித்தல்
குருணாகல் - புத்தளம் (Puttalam) வீதியில் தொடருந்து கடவை ஊடான பகுதி இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை இலங்கை தொடருந்து திணைக்களம் இன்று (07) அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
புத்தளம்- 55ஆம் கட்டையில் உள்ள தொடருந்து கடவையில் திருத்தப்பணிகள் நடைபெறவுள்ள காரணத்தினாலேயே குறித்த வீதி மூடப்படவுள்ளது.
சாரதிகளுக்கு அறிவுறுத்தல்
திருத்தப்பணிகள் நடைபெற்று வருவதால் நாளை சனிக்கிழமை (08) மற்றும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (09) குருணாகல் - புத்தளம் வீதியில் தொடருந்து கடவை ஊடான பகுதி மீண்டும் மூடப்படும்.
நேற்றைய தினமும் திருத்தப்பணிகளினால் இந்த வீதி மூடப்பட்டது.
இந்த நடவடிக்கையால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், அசௌகரியத்தை குறைத்து கொள்வதற்கும் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |