சம்மாந்துறையில் விசர் நாய்கடித்து 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Ministry of Health Sri Lanka Sri Lankan Peoples Eastern Province Sammanthurai Public Health Inspector
By Rakshana MA Mar 13, 2025 12:15 PM GMT
Rakshana MA

Rakshana MA

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட செந்நெல் கிராம பகுதியில் 7 பேரை கட்டாக்காலி நாய் கடித்த சம்பவம் ஒன்று நேற்று(12) பதிவாகியுள்ளது.

இந்நிலையில், உடனடியாக செயற்பட்ட சுகாதார பரிசோதகர்கள் வைத்தியசாலைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டுள்ளதுடன், சம்பவ இடத்திற்கு சென்று அப்பிரதேச இளைஞர்களால் கொல்லப்பட்ட குறித்த நாயின் தலையை மீட்டு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மட்டக்களப்பிற்கான புதிய பிரதி பொலிஸ்மா அதிபர் நியமனம்

மட்டக்களப்பிற்கான புதிய பிரதி பொலிஸ்மா அதிபர் நியமனம்

நாய்களுக்கான தடுப்பூசி 

அத்துடன், இன்று(13) அப்பிரதேசத்திலுள்ள கட்டாக்காலி நாய்களுக்கு தடுப்பூசி வழங்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விசர் நாய் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வேண்டுகொள் விடுத்துள்ளார்.

சம்மாந்துறையில் விசர் நாய்கடித்து 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி | Rabies Bite Vaccination Program In Sammanthurai

இந்நிலையில், 3 வயது தொடக்கம் 35 வயதுக்குட்பட்டவர்கள் இவ்வாறு விசர் நாய் கடிக்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.நௌசாத், பிராந்திய தொற்று நோய் தடுப்பு வைத்திய அதிகாரி எம்.ஏ.சி.எம்.பஸால், மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லாபீர் ஆகியோரின் ஆலோசனையில் உரிய நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

EPF முறையாக வழங்காத நிறுவனங்கள் தொடர்பில் வெளியான தகவல்

EPF முறையாக வழங்காத நிறுவனங்கள் தொடர்பில் வெளியான தகவல்

மத ஒற்றுமைக்கான கல்முனையில் சிறப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

மத ஒற்றுமைக்கான கல்முனையில் சிறப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGallery