மட்டக்களப்பிற்கான புதிய பிரதி பொலிஸ்மா அதிபர் நியமனம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய பிரதி பொலிஸ்மா அதிபராக நியமனம் பெற்றுள்ள எம்.என்.எஸ்.நுவான் மென்டிஸ் நியமனம் பெற்றுள்ளார்.
மாவட்டத்தின் சிறப்பு பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலிரத்னவின் தலைமையில் இன்று(13) காலை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
இப்பதவியேற்கும் நிகழ்வானது, மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளதுடன் பொலிஸ் அணிவகுப்பு மரியாதையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புதிய நியமனம்
மேலும், மாவட்டத்தின் 15 பொலிஸ் நிலையங்களினதும் பொறுப்பு அதிகாரிகள், உதவி பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட மாவட்டத்தின் பிரதான பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றியிருந்த ஜெகத் நிசாந்த இடமாற்றம் பெற்று சென்றதை தொடர்ந்து புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


