சாய்ந்தமருதில் திடீர் பரிசோதனையுடன் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட கடற்கரை வீதியில் உள்ள உணவகங்கள் இன்று (05) திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதன்போது குறித்த உணவகங்களில் QR code ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டுள்ளன.
சுகாதார வைத்திய ஜே.மதனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சுகாதார சேவை
அத்துடன், மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற வகையில் உணவைக் கையாண்ட உணவக உரிமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டதுடன், அவ் உணவகங்களில் கடமை புரியும் ஊழியர்கள் கட்டாயம் மருத்துவச்சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும் என பொது சுகாதார பரிசோதகரினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் உணவு கையாளும் நிறுவனங்களில் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை உடனடியாக அறிவிப்பதற்கு QR ஸ்டிக்கரும் உணவகங்களில் ஒட்டப்பட்டமையால் பொதுமக்கள் தங்களது முறைப்பாடுகளை QR scan செய்வதன் மூலம் உணவகங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்குரிய தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஜே.மதன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

