சுகாதார சேவை குறித்த முறைப்பாடுகளை தெரிவிக்க QR குறியீட்டு முறைமை அறிமுகம்
பொதுமக்கள் தங்களது சுகாதார சேவைகள் குறித்த முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக QR குறியீட்டு முறைமை அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த QR குறியீடு அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு நேற்று(01) சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பொது இடங்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களில், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கான இந்த QR குறியீடு தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சேவை தொடர்பான முறைப்பாடுகள்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகீலா இஸ்ஸதீனின் ஆலோசனைக்கு அமைவாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஜே.மதனால் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மற்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
[HFPUF9W
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

