ஆரம்பமாகவுள்ள பெரும்போகத்திற்கான நெல் கொள்வனவு
பெரும்போகத்திற்கான நெல் கொள்வனவு இந்த மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப்பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த விடயத்தினை வர்த்தக மற்றும் உணவுப்பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர்.எம் ஜயவர்த்தன(Jeyawardana) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்துள்ளார்.
நெல் கொள்வனவு
அத்துடன், அரசாங்கத்திடம் உள்ள அரிசி கையிருப்பை அதிகரிக்கவும், லங்கா சதொச நிறுவனங்களின் ஊடாக அரிசி விற்பனையை விரிவுபடுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு விவசாயிகளிடம் இருந்து அதிகளவான நெல்லை கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் வர்த்தக மற்றும் உணவுப்பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர்.எம் ஜயவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |