சிறைச்சாலையின் கட்டடம் மீது முறிந்து வீழ்ந்த மரம் : ஒருவர் மரணம்
Matara
Sri Lankan Peoples
Department of Prisons Sri Lanka
Prisons in Sri Lanka
Prison
By Rakshana MA
மாத்தறை(Matara) சிறைச்சாலையிலுள்ள கட்டடமொன்றின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர் என மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து, நேற்றிரவு(01) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மேலும், சம்பவத்தில் காயமடைந்த 12 பேர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[XCV7Q1Y
விபத்துச்சம்பவம்
அத்துடன் மிதிகம(Midigama) பகுதியைச் சேர்ந்த 34 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |