இலங்கையின் வரவு செலவு பட்டியல் விவாதம் தொடர்பில் வெளியான தகவல்கள்
வரவு செலவு பட்டியல்(Budget) மீதான விவாதம் பெப்ரவரி 18ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை 26 நாட்கள் நடத்தப்படும் என நாடாளுமன்ற விவகாரக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
வரவு செலவு பட்டியல்
இந்த வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம், பெப்ரவரி 18ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரை 7 நாட்களுக்கு நடைபெறவுள்ளதுடன் அது தொடர்பான வாக்கெடுப்பு 25ஆம் திகதி மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது.
மேலும், வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை 04 சனிக்கிழமைகள் உட்பட நடைபெறவுள்ளது. மூன்றாவது வாசிப்பு வாக்கெடுப்பு மார்ச் 21 ஆம் தேதி பிற்பகல் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |