நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசி : வெளியான தகவல்
இலங்கைக்கு இன்று (31) நண்பகல் 12 மணி வரை 79,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டு, சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்கள (Sri Lanka Customs) தகவல்கள் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசியில் 31,000 மெட்ரிக் தொன் கச்சா அரிசியும் 48,000 தொன் புழுங்கல் அரிசியும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த கையிருப்பில் இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட 780 தொன்கள் அரிசியும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அரிசி இறக்குமதி
அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் ஜனவரி 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டதுடன், அதற்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 24 ஆம் திகதி வெளியிடப்பட்டது.
அதன் பிரகாரம் அரிசி இறக்குமதிக்கான தடை நீக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, சந்தையில் நாட்டு அரிசி மற்றும் வெள்ளை பச்சை அரிசி வகைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், புத்தாண்டை வரவேற்க பாரம்பரிய பாற்சோறு தயாரிப்பதற்கு கடினமாக இருக்கும் என்று மரதகஹமுல அரிசி வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |