கோவிட் நோயின் தோற்றம் குறித்த தரவுகளை சமர்ப்பிக்க சீனாவுக்கு வெளியான அறிக்கை
உலகையே புரட்டிப்போட்ட COVID-19 தொற்றுநோய் எவ்வாறு தொடங்கியது என்பதைப் புரிந்துகொள்வதற்கான தரவு மற்றும் அணுகலைப் பகிர்ந்து கொள்ளுமாறு உலக சுகாதார அமைப்பு சீனாவிடம் கேட்டுள்ளது.
அது கோவிட் தொற்றுநோய் ஆரம்பித்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அறிக்கை ஒன்றின் மூலம் குறித்த தகவலை சுட்டிக்காட்டியு்ளளது.
அத்துடன் இந்த COVID-19 தொற்றுநோய் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் மரணத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளின் பொருளாதாரங்கள் மற்றும் சுகாதார அமைப்புகளையும் கூட தகர்த்தெறிந்துள்ளது.
நோய்க்கான காரணம்
மேலும், உலக சுகாதார நிறுவனம் ஒரு அறிக்கையில் கூறியது, "கோவிட்-19 இன் தோற்றத்தைப் புரிந்துகொள்ள, தரவுகளைப் பகிரவும் அணுகவும் சீனாவை நாங்கள் தொடர்ந்து கேட்டுக்கொள்கிறோம்.
அத்துடன் இது ஒரு தார்மீக மற்றும் அறிவியல் கட்டாயமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து நாடுகளுக்கு இடையே வெளிப்படைத்தன்மை, பகிர்வு மற்றும் ஒத்துழைப்பு இல்லாமல், உலகத்தால் எதிர்கால தொற்றுநோய்கள் மற்றும் தொற்றுநோய்களை போதுமான அளவு தடுக்க மற்றும் தயார் செய்ய முடியாது எனவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |