எரிபொருளின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

Fuel Price In Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Fuel Crisis
By Rakshana MA Dec 31, 2024 06:21 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இவ்வாறு எரிபொருளின் விலையில் மாற்றங்கள் ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

கடந்த மாத விலை மாற்றம் 

இலங்கையின் ஒவ்வொரு மாதமும் முன்னெடுக்கப்படும் எரிபொருள் விலைத்திருத்தத்தின் அடிப்படையில், இறுதியாக கடந்த நவம்பர் மாதம் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்படி, 311 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 02 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 309 ரூபாவாகும்.

தொடருந்து பயணம் மேற்கொள்ளவுள்ளோருக்கான அறிவித்தல்

தொடருந்து பயணம் மேற்கொள்ளவுள்ளோருக்கான அறிவித்தல்

விலையில் மாற்றம்

மேலும், 283 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 03 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 286 ரூபாவாகும்.

எரிபொருளின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம் | Change In Fuel Prices

அத்துடன் மண்ணெண்ணெய் 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 188 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

இதேவேளை, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையிலும், சுப்பர் டீசலின் விலையிலும் எவ்விதமான மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டத்தாபனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அச்சகத் திணைக்களத்தின் மீது சைபர் தாக்குதல்

இலங்கை அச்சகத் திணைக்களத்தின் மீது சைபர் தாக்குதல்

இலங்கையில் தனியார் மருந்தகங்கள் மூடப்படும் அபாயம்

இலங்கையில் தனியார் மருந்தகங்கள் மூடப்படும் அபாயம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW