நாகப்பட்டினம் - காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை தொடர்பில் முக்கிய அறிவித்தல்
தமிழகத்தின் நாகப்பட்டினம்(Nagapattinam) மற்றும் காங்கேசன்துறைக்கும்(Kankesanturai) இடையில் இயங்கி வரும் பயணிகள் கப்பல் சேவை மீண்டும் தாமதமடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பல் சேவையினை சீரற்ற காலநிலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று(02) முதல் மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கப்பல் சேவை மீண்டும் தாமதமடைவதாக குறித்த கப்பல் சேவை நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
வானிலை முன்னறிவிப்பு
மேலும், வெவ்வேறு தரப்பிடம் இருந்து கிடைக்கப் பெற்ற வானிலை முன்னறிவித்தலைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, குறித்த கப்பல் சேவையை எதிர்வரும் 6ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் குறித்த கப்பல் சேவை நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சுந்தரராஜ் பொன்னுசாமி குறிப்பிட்டுள்ளாார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |