சாய்ந்தமருதில் சுகாதார வைத்திய அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட அதிரடி சோதனை

Sri Lankan Peoples Eastern Province Public Health Inspector
By Rakshana MA Apr 26, 2025 10:46 AM GMT
Rakshana MA

Rakshana MA

சாய்ந்தமருது (Sainthamaruthu) சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட உணவகத்தில் நேற்று (25) திடீர் சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற QR code மூலமான முறைப்பாட்டினை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம். ஜெரின் குழுவினர் உடனடியாக செயல்பட்டு உணவு கையாளும் நிறுவனத்தினை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

திடீர் சோதனை

இதன் போது குறித்த நிறுவனத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் சேமிக்கப்பட்டிருந்த மற்றும் விற்பனைக்காக வெளிக்காட்டப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு உணவக உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருதில் சுகாதார வைத்திய அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட அதிரடி சோதனை | Publics Qr Code Complaints To Phi In Sammanthurai

மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது எமது கடமையும், பொறுப்பும் ஆகும்.

ஆகவே உங்களது முறைப்பாடுகளை உரிய ஆதாரங்களுடன் எங்களுக்கு அறியத்தாருங்கள் QR code ஊடாக வழங்கப்படும் பட்சத்தில் விரைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஜே. மதன் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார். 

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புக்கள்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புக்கள்

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி மிக விரைவில் கைது..

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி மிக விரைவில் கைது..

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW       


Gallery