மாகாண சபை முறை குறித்து நாடாளுமன்றில் கேள்வி எழுப்பிய சாணக்கியன்

Provincial Council Parliament of Sri Lanka Shanakiyan Rasamanickam Sri Lanka Sri Lanka Cabinet
By Rakshana MA Dec 03, 2024 09:05 AM GMT
Rakshana MA

Rakshana MA

மாகாண சபை முறையை இல்லாதொழிக்க போவதாக ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் இன்று(03)நாடாளுமன்ற அமர்வின் போது இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேள்வி எழுப்பினார்.

ஜே.வி.பி யின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா, மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்க போவதாகப் பத்திரிகைகளுக்குக் அறிவித்திருந்த விடயத்தைத் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகக் கருத வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் பிரதான வீதியில் நிகழ்ந்த சம்பவம் : குழம்பிய மக்கள்

மட்டக்களப்பில் பிரதான வீதியில் நிகழ்ந்த சம்பவம் : குழம்பிய மக்கள்

ஜனாதிபதியிடம் கலந்துரையாடலுக்கான அழைப்பு

இந்த விடயத்தில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது குறுக்கிட்ட சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இராசமாணிக்கம் சாணக்கியன் மீது மிகுந்த மரியாதை கொண்டிருப்பதாகவும் ஏனையோர் சொல்வதைக் கேட்டு முறையற்ற சந்தேகங்களை எழுப்ப வேண்டாம் எனவும் கோரினார்.


அதேநேரம் இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் ஸ்ரீதரன் இது விடயமாக ஜனாதிபதியிடம் கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருப்பதாகத் தெரிவித்தார்.

அத்துடன் பிமல் ரத்னாயக்க, ஜே.வியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா அன்றி ஜனாதிபதியுடன் சந்திப்புக்கு ஒழுங்குபடுத்துவதாகவும் இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் குறிப்பிட்டார்.

கிழக்கில் மண் அகழ்வதற்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடை

கிழக்கில் மண் அகழ்வதற்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW