மட்டக்களப்பில் பிரதான வீதியில் நிகழ்ந்த சம்பவம் : குழம்பிய மக்கள்
மட்டக்களப்பில் பிரதான வீதியில் இடம்பெற்ற படப்பிடிப்பு காரணமாக வீதியால் பயணித்த மக்கள் குழப்பமடைந்த நிலை உருவாகியுள்ளது.
மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்திற்கு முன்னால் உள்ள மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியில் இன்று காலை(03) 9.00மணியவில் படப்பிடிப்பு ஒன்று இடம்பெற்றது.
விழிப்புணர்வுப்படம்
இதன்போது விபத்து காட்சி ஒன்று படமாக்கிக் கொண்டிருந்த வேளை படப்பிடிப்பிற்காக போக்குவரத்து பொலிஸார், விமானபடையினர் மற்றும் அம்பியூலன்ஸ் வண்டிகள் என வீதியி்ல் நிறுத்தப்பட்டு இருந்தன.
இந்நிலையில் அவ்வீதியூடாக பயணித்த மக்கள் அங்கு பாரிய விபத்து ஏற்பட்டுள்ளதாக நினைத்து பீதியடைந்துள்ளனர்.
மேலும் இது விழிப்புணர்வு ஆவணப்படம் ஒன்றிற்கான படப்பிடிப்பே என படப்பிடிப்பாளர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |