கல்முனை பாலிக்காவுக்கு ஸ்மார்ட் போர்ட் வழங்கிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு

Sri Lankan Peoples Eastern Province Kalmunai Foreign Employment Bureau School Incident
By Rakshana MA Dec 16, 2024 10:56 AM GMT
Rakshana MA

Rakshana MA

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி பாடசாலை மாணவிகளின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளுக்கு பயன்பெறும் நோக்கில் ஸ்மார்ட் போர்ட்(Smart Board) சாதனங்கள் இலங்கை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த ஸ்மார்ட் போர்ட் சாதனங்கள் மற்றும் ஆவணங்களை உத்தியோகபூர்வமாக கல்லூரி முதல்வர் ஏ.பி.நஸ்மியா சனூஸிடம்  (SLEAS) கையளிக்கும் நிகழ்வு இன்று(16) அதிபர் காரியாலத்தில் இடம்பெற்றுள்ளது.

பொலன்னறுவையிலிருந்து புதிய சபாநாயகர்! வெளியாகவுள்ள தீர்மானம்

பொலன்னறுவையிலிருந்து புதிய சபாநாயகர்! வெளியாகவுள்ள தீர்மானம்

நிகழ்வு

மேலும், இந்த அன்பளிப்பு தொடர்பில் பாடசாலை அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் கூறியுள்ளதாவது,

இந்த சந்தர்ப்பத்தில் எமது கல்லூரிக்கு ஸ்மார்ட் போர்ட் பெற்றுத்தர அளப்பரிய பங்காற்றிய கல்முனை முன்னாள் பிரதேச செயலாளரும் தற்போதைய கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளருமான ஜே.லியாக்கத் அலிக்கு ஆத்மார்த்தமான நன்றிகளையும் வாழ்த்துக்களையும் பாடசாலை சமூகம் சார்பாக தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

கல்முனை பாலிக்காவுக்கு ஸ்மார்ட் போர்ட் வழங்கிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு | Provided Smart Port For Kalmunai Balika School

மேலும், கல்லூரியின் பிரதி அதிபர், கல்முனை பிரதேச செயலகத்தின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஊத்துச்சேனைக் கொலையில் ஈடுபட்டவர்கள் கைது

ஊத்துச்சேனைக் கொலையில் ஈடுபட்டவர்கள் கைது

ஆலையடிவேம்பில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கற்றல் உபகரணங்கள்

ஆலையடிவேம்பில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கற்றல் உபகரணங்கள்

       நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW