வடக்கு- கிழக்கில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு

Northern Province of Sri Lanka
By Laksi Dec 09, 2024 04:32 PM GMT
Laksi

Laksi

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த போராட்டமானது நாளை (10) காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அறிவித்துள்ளனர்.

வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடியும் அவர்களுக்கு நீதி கோரியும் கடந்த பல வருடங்களாக உறவுகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக செயலாளராக ஜே.எஸ்.அருள்ராஜ்

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக செயலாளராக ஜே.எஸ்.அருள்ராஜ்

வடக்கு கிழக்கில் பேரணி

இலங்கை அரசிடம் நீதி கோரியும் கிடைக்காத நிலையில் சர்வதேசத்திடம் நீதி கோரி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

வடக்கு- கிழக்கில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு | Protests North East International Human Rights Day

இதுவரை தீர்வு கிடைக்காத நிலையில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் வடக்கு கிழக்கில் பேரணி மற்றும் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர்.

அந்தவகையில், திருகோணமலையில் பேருந்து தரிப்பிடத்திலும், அம்பாறையில் தம்பிலுவில் மத்திய சந்தையிலிருந்து திருக்கோவில் வரையும், மட்டக்களப்பில் தந்தை செல்வா சிலைப்பகுதியிலிருந்து காந்தி பூங்கா வரையிலும், வவுனியாவில் பேருந்து நிலையத்திலும், முல்லைத்தீவில் கச்சேரிக்கு முன்பாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு

அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு

ஆதரவு தருமாறு அழைப்பு

அத்தோடு, யாழ்ப்பாணத்தில் நல்லை ஆதீனம் முன்பாகவும், கிளிநொச்சியில் கந்தசுவாமி கோவில் முன்றல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அலுவலக முன்றலிலும், மன்னாரில் பேருந்து நிலைத்திலும் காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

வடக்கு- கிழக்கில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு | Protests North East International Human Rights Day

இந்த போராட்டத்தில் மதத்தலைவர்கள், பொதுமக்கள், மக்கள் பிரிதிநிதிகள்,சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு ஆதரவு தருமாறும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

குற்றவியல் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கைது

குற்றவியல் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW