அம்பாறையில் வைத்திய அதிகாரிகளால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

Ampara Hospitals in Sri Lanka Eastern Province
By Laksi Sep 04, 2024 11:04 AM GMT
Laksi

Laksi

வைத்தியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும் வைத்தியர்கள் மீதான அடக்குமுறைகள் நிறுத்தப்பட்டு சுகாதார சேவையில் காணப்படும் குறைபாடுகள் உடனடியாக நீக்கப்பட வேண்டி வைத்திய அதிகாரிகள் ஒன்றிணைந்து நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டமானது நேற்று (3) மதியம் அம்பாறை மாவட்டம் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை முன்பாக இடம்பெற்றுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள், தற்போதைய அரசாங்கத்திற்கு இதுவரை வைத்தியர்கள் எதிர் நோக்கும் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் ஒன்றுமே நிறைவேற்றப்படவில்லை.

சில உணவுப் பொருட்களின் உச்ச கட்டுப்பாட்டு விலைகளை அறிவித்துள்ள நுகர்வோர் விவகார அதிகார சபை

சில உணவுப் பொருட்களின் உச்ச கட்டுப்பாட்டு விலைகளை அறிவித்துள்ள நுகர்வோர் விவகார அதிகார சபை

மருத்துவ உபகரணங்கள்

அத்துடன் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உடனடியாக மக்களுக்கு கிடைக்க வழி செய்ய வேண்டும். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி முறையற்ற வைத்தியர்களின் இடமாற்றம் வழங்குவதை நிறுத்த வேண்டும்.

அம்பாறையில் வைத்திய அதிகாரிகளால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு | Protest On Doctors In Ampara

வாழ்வாதாரத்துக்கு ஏற்ற ஊதியங்களை அதிகரிக்க வேண்டும்.வைத்தியசாலையில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி செய்ய வேண்டும்.

தமிழரசுக் கட்சியினால் எடுக்கப்பட்ட முடிவானது எமது மக்களுக்கு ஏற்புடையது அல்ல

தமிழரசுக் கட்சியினால் எடுக்கப்பட்ட முடிவானது எமது மக்களுக்கு ஏற்புடையது அல்ல

பணிப்புறக்கணிப்பு

குறிப்பாக சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்தும் தொழிற்சங்கத் தலைவர்களை ஒடுக்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் ஒழுக்காற்று விசாரணைகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் இவ்வாறு ஏராளமான பிரச்சனைகள் உள்ளன என குறிப்பிட்டனர்.

அம்பாறையில் வைத்திய அதிகாரிகளால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு | Protest On Doctors In Ampara

மேலும் எதிர்காலத்தில் தாம் முன் வைத்த கோரிக்கைகளுக்கு சுகாதார அமைச்சினால் எந்தவொரு தீர்வும் கிடைக்காவிட்டால் நாடு பூராகவும் உள்ள வைத்தியசாலைகளில் அனைத்து சேவைகளையும் நிறுத்தி பணிப்புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில் குதிப்போம் என தெரிவித்தனர்.

தபால் தலை கண்காட்சி தொடர்பில் வெளியான தகவல்

தபால் தலை கண்காட்சி தொடர்பில் வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW