தபால் தலை கண்காட்சி தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka Sri Lankan Peoples
By Mayuri Sep 04, 2024 09:04 AM GMT

2024ஆம் ஆண்டு உலக தபால் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களின் பங்குபற்றுதலுடன் தபால் தலை கண்காட்சி போட்டியை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த முத்திரை கண்காட்சி கல்வி அமைச்சின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

5 முதல் 13ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இதில் பங்குகொள்ளலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இக்கண்காட்சியின் நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களுக்கு, 011 23 26 163 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW