கிராமப்புற முஸ்லிம்களின் புனித ஹஜ் யாத்திரை: விஜித ஹேரத் விடுத்துள்ள கோரிக்கை

Colombo Vijitha Herath Saudi Arabia
By Laksi Nov 04, 2024 02:27 PM GMT
Laksi

Laksi

கொழும்பிலும் கிராமப்புறங்களிலும் வாழும் முஸ்லிம் சமூகத்தினரும் புனித ஹஜ் யாத்திரை நடவடிக்கைகளில் பங்குபற்றும் வகையில் திட்டம் வகுக்கப்பட வேண்டும் என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

அத்தோடு ,இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தினால் கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் ஹஜ் யாத்திரையை ஏற்பாடு செய்யும் முகவர்களுக்கும் இடையில் நேற்று (3) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

கிழக்கில் பல்துறை சார் மானிய உதவிகளுக்கு பல பில்லியன் நிதி: சந்தோஷ் ஜா தெரிவிப்பு

கிழக்கில் பல்துறை சார் மானிய உதவிகளுக்கு பல பில்லியன் நிதி: சந்தோஷ் ஜா தெரிவிப்பு

ஹஜ் யாத்திரை

இந்த நிலையில் , ஹஜ் யாத்திரையை ஏற்பாடு செய்யும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் முன்வைக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிராமப்புற முஸ்லிம்களின் புனித ஹஜ் யாத்திரை: விஜித ஹேரத் விடுத்துள்ள கோரிக்கை | Project To Participate In Country Side Muslim Hajj

தேர்தல் காலத்தில் முஸ்லிம் சமூகத்தில் பரப்பப்படும் அவதூறுகள் குறித்தும் கருத்து தெரிவித்த அவர், தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழ் அனைத்து மத நம்பிக்கைகளும் அனுமதிக்கப்படுவதாகவும், இதில் எந்த தடையும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரோ அல்லது பின்னரோ இஸ்லாமிய திருமண விதிகளை மாற்றுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை எனவும், சமூக வலைத்தளங்கள் ஊடாக உலாவரும் ஒவ்வொரு அமைப்பின் கருத்தும் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கருத்து அல்ல எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு

வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு

ஹஜ் கோட்டா விநியோகம்

அத்தோடு ,சவூதி அரசினால் இலங்கைக்கு வருடாந்தம் வழங்கப்படும் ஹஜ் கோட்டா விநியோகம் தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கிராமப்புற முஸ்லிம்களின் புனித ஹஜ் யாத்திரை: விஜித ஹேரத் விடுத்துள்ள கோரிக்கை | Project To Participate In Country Side Muslim Hajj

மேலும், 2004ஆம் ஆண்டு அமைச்சரவை அமைச்சராக இருந்த போது முஸ்லிம் பெண்களின் பாடசாலைச் சீருடைக்கு ஹிஜாப் தைக்கத் தேவையான துணியை ஒதுக்குவது தொடர்பாக அமைச்சரவைப் பத்திரத்தின் மூலம் தேவையான பணிகளைச் செய்திருந்தமையும் நினைவுகூரப்பட்டது.

இந்தநிகழ்வில், மத கலாசார அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன, புத்தசாசன. முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ், இலங்கை ஹஜ் குழு தலைவர் இப்றாகீம் அன்சார் மற்றும் உறுப்பினர்கள், திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்கள், திணைக்கள அதிகாரிகள், அமைச்சின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை மாணவர்களின் சீருடை தொடர்பில் சீன அரசாங்கம் வெளியிட்ட தகவல்

பாடசாலை மாணவர்களின் சீருடை தொடர்பில் சீன அரசாங்கம் வெளியிட்ட தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW