சிறுவர்கள் தொடர்பில் நடைமுறையாகும் புதிய சட்டம்: வெளியான அறிவிப்பு

Parliament of Sri Lanka Sri Lanka School Children
By Laksi Dec 06, 2024 01:17 PM GMT
Laksi

Laksi

2025 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹசங்க விஜேமுனி (Hansaka Wijemuni) இன்று (6) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே தெரிவித்துள்ளார்.

அத்தோடு ,அதற்கான வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் பெருமளவான போதைப்பொருட்களுடன் சிறுவன் கைது

மட்டக்களப்பில் பெருமளவான போதைப்பொருட்களுடன் சிறுவன் கைது

தடை

அவர் மேலும் தெரிவிக்கையில்,  "குறிப்பாக 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை ஜனவரி 1ஆம் திகதி முதல் விளம்பரங்களுக்கு பயன்படுத்துவதை தடுப்போம்.

சிறுவர்கள் தொடர்பில் நடைமுறையாகும் புதிய சட்டம்: வெளியான அறிவிப்பு | Prohibition Of Using Children For Advertisements

அதற்கான வர்த்தமானியை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து பணிகளையும் செய்துள்ளோம். ஏனெனில் கடந்த அரசாங்கங்கள் இதனை 7-8 வருடங்களாக இழுத்தடிப்பு செய்தன.

கடந்த வாரம் நாங்கள் ஒரு முடிவை எடுத்தோம். அதை நாங்கள் இழுத்தடிக்க போவதில்லை. ஜனவரி முதலாம் திகதி முதல் இதனை நடைமுறைப்படுத்துவோம் என்றார்.

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

புத்தளம் -அனுராதபுரம் வீதியில் கனரக வாகனம் கவிழ்ந்து விபத்து

புத்தளம் -அனுராதபுரம் வீதியில் கனரக வாகனம் கவிழ்ந்து விபத்து

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW