கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான போசாக்கான உணவு தொடர்பில் கலந்துரையாடல்

Sri Lankan Peoples Healthy Food Recipes Eastern Province Public Health Inspector
By Rakshana MA Apr 04, 2025 12:41 PM GMT
Rakshana MA

Rakshana MA

சாய்ந்தமருது பிரதேசத்திற்குட்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான போசாக்கான உணவு வழங்கும் செயற்திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது சாய்ந்தமருது உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஐ.முஆபிக்கா தலைமையில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

தெஹிவளை பள்ளிவாசல் இடிப்பது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

தெஹிவளை பள்ளிவாசல் இடிப்பது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

போசாக்கான உணவு

எதிர்வரும் காலங்களில் போசாக்கான உணவுகளுக்கான வவுசர்கள் வழங்கப்படும் பட்சத்தில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சுற்று நிரூபத்துக்கமைய சுகாதாரமான உணவுகள் வழங்கப்பட வேண்டும் எனவும், இவ்வாறு வழங்கப்படும் உணவுகள் சுகாதாரத்துக்கு கேடான வகையில் அமையப்பெறும் நிலையில் காணப்படுமாயின் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என்பதாகவும் இதன்போது தீர்மானமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான போசாக்கான உணவு தொடர்பில் கலந்துரையாடல் | Program For Nutritious Food For Feeding Mothers  

மேலும், இந்த நிகழ்வில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஜே.மதன், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.ஜரீன், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்கள் போன்றோர் பங்குபற்றியுள்ளனர்.

வக்ஃபு சட்டத் திருத்த யோசனை தொடர்பில் முஸ்லிம்களுக்கு ஆதரவளிக்கும் நடிகர் விஜய்

வக்ஃபு சட்டத் திருத்த யோசனை தொடர்பில் முஸ்லிம்களுக்கு ஆதரவளிக்கும் நடிகர் விஜய்

தங்க விலையில் திடீர் மாற்றம்! வாங்கவுள்ளோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

தங்க விலையில் திடீர் மாற்றம்! வாங்கவுள்ளோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGallery