தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் பாஸில் மீண்டும் தெரிவு..!

South Eastern University of Sri Lanka Sri Lanka Education
By Rukshy Aug 16, 2024 05:52 AM GMT
Rukshy

Rukshy

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆரம்பப் பீடங்களுள் ஒன்றாக விளங்கும் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதியாக, பேராசிரியர் எம்.எம். பாஸில் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கலை கலாசார பீடத்திற்கான பீடாதிபதியாக பணியாற்றிய பேராசிரியர் பாஸிலின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் புதிய பீடாதிபதியினைத் தெரிவு செய்யும் நிகழ்வு நேற்று (15) பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீட் தலைமையில் பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

வரலாற்றுச் சாதனை படைத்த கல்முனை கல்வி வலயம்

வரலாற்றுச் சாதனை படைத்த கல்முனை கல்வி வலயம்

உயர் சபை உறுப்பினர்கள்

இந்நிகழ்வில், தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தினுடைய உயர் சபை உறுப்பினர்கள், பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர், சிரேஷ்ட உதவி பதிவாளர் எம்.ரீ. அஹமட் அஷ்ஹர் மற்றும் சிரேஷ்ட சட்ட ஆலோசகர் ஏ.ஆர்.எம். சுல்பி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் பாஸில் மீண்டும் தெரிவு..! | Professor Bassil Reelected Southeastern University

நிகழ்வில் குறித்த வெற்றிடத்துக்காக பேராசிரியர் எம்.எம். பாஸில் போட்டியிட்டிருந்தார். இதில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று பேராசிரியர் பாஸில் மீண்டும் பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

இவர் கடந்த 2021. 08.16 ஆம் திகதி எட்டாவது பீடாதிபதியாக போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணிலிடம் சாணக்கியன் 60 கோடி ரூபா பெற்றதாக குற்றச்சாட்டு! வழங்கப்பட்டுள்ள பதில்

ரணிலிடம் சாணக்கியன் 60 கோடி ரூபா பெற்றதாக குற்றச்சாட்டு! வழங்கப்பட்டுள்ள பதில்

வாக்களிப்பதற்கு ஒரு மில்லியன் பேர் தகுதி! வெளியாகியுள்ள தகவல்

வாக்களிப்பதற்கு ஒரு மில்லியன் பேர் தகுதி! வெளியாகியுள்ள தகவல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW