தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை
Sri Lanka
Sri Lanka Cabinet
Money
By Laksi
தனியார் துறை ஊழியர்களின் ஊதியத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது தனியார் துறை ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச மாதாந்த ஊதியம் 12,500 ரூபாவாகவும் குறைந்தபட்ச நாளாந்த ஊதியம் 500 ரூபாவாகவும் உள்ளது.
அமைச்சரவை அங்கீகாரம்
இந்தநிலையில், குறைந்தபட்ச மாதாந்த ஊதியத்தை 17,500 ரூபாவாகவும் குறைந்தபட்ச நாளாந்த ஊதியத்தை 700 ரூபாவாகவும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, இது தொடர்பான சட்டமூலம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், தேசிய குறைந்தபட்ச ஊதிய அதிகரிப்பு திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |