அம்பாறையில் மாணவர்களை கடுமையாகத் தாக்கிய பௌத்தகுரு

Sri Lankan Peoples School Incident schools
By Rakshana MA May 20, 2025 04:27 AM GMT
Rakshana MA

Rakshana MA

அம்பாறை பாடசாலையொன்றில் ஒன்பது மாணவர்கள் முழங்காலில் நிற்க வைக்கப்பட்டு அதிபரான பௌத்த மதகுருவால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் அம்பாறை நகரில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கடந்த 15ம் திகதி இடம்பெற்றுள்ளது.

பிரஸ்தாப பாடசாலையில் கடந்த 15 ஆம் திகதி அன்று பாடசாலை நேரத்திற்கு பின்னர் பிரத்தியேக வகுப்புகள் நடைபெற்றுள்ளன.

12 வருடங்களின் பின் ஒலுவில் துறைமுகத்திட்டத்தில் மாற்றம்! வெளியான தகவல்

12 வருடங்களின் பின் ஒலுவில் துறைமுகத்திட்டத்தில் மாற்றம்! வெளியான தகவல்

தாக்கப்பட்ட மாணவர்கள் 

அன்றைய தினம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட இடைவேளையின் போது ​​கழிப்பறைக்குச் சென்ற பல குழந்தைகள் தண்ணீர் விசிறியடித்து விளையாட்டில் ஈடுபட்டதாக வகுப்பு ஆசிரியரால் பாடசாலை அதிபருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறையில் மாணவர்களை கடுமையாகத் தாக்கிய பௌத்தகுரு | Principal Attacks Students In Ampara

இதற்கமைய மறுநாள் 16.05.2025 அன்று பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் பாடசாலை அதிபர் தனது கையில் மூன்று பிரம்புகளை எடுத்து ஒன்பது குழந்தைகளையும் வரவழைத்து முழங்காலில் நிற்க வைத்து அவர்களின் கைகளை சுவரில் வைத்து பிள்ளைகளின் முதுகில் கொடூரமாக தாக்கியுள்ளார்.

இந்நிலையில், வீடு திரும்பிய பாதிக்கப்பட்ட பிள்ளைகள் நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

கிழக்கில் அதிகரிக்கும் கடற்கொள்ளையர்களின் திருட்டு சம்பவங்கள் : மக்கள் முன்வைத்துள்ள கோரிக்கை

கிழக்கில் அதிகரிக்கும் கடற்கொள்ளையர்களின் திருட்டு சம்பவங்கள் : மக்கள் முன்வைத்துள்ள கோரிக்கை

முறைப்பாடு

பெற்றோர்கள் பிள்ளைகளை பரிசோதித்தபோது ​​கடுமையாக அடிபட்டதால் வீக்கம் மற்றும் வலி நிறைந்த காயம் உள்ள பகுதிகளை அடையாளம் காணப்பட்டுள்ளது.

அம்பாறையில் மாணவர்களை கடுமையாகத் தாக்கிய பௌத்தகுரு | Principal Attacks Students In Ampara

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர்கள் இன்று சிறுவர் மறுவாழ்வு மையம் அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் இந்த பிள்ளைகள் மீதான தாக்குதல்கள் குறித்து எழுத்துப்பூர்வமாக முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.

இதே வேளை அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளர் இந்த தாக்குதல் குறித்து கல்வி அலுவலகம் உடனடியாக விசாரணையைத் தொடங்கும் என்று உறுதியளித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தால் பாகிஸ்தானுக்கு விதிக்கப்பட்ட 11 கடும் நிபந்தனைகள்

சர்வதேச நாணய நிதியத்தால் பாகிஸ்தானுக்கு விதிக்கப்பட்ட 11 கடும் நிபந்தனைகள்

நாளைய நாடாளுமன்றில் அம்பாறை குறித்து விவாதம் செய்யவுள்ள உறுப்பினர்

நாளைய நாடாளுமன்றில் அம்பாறை குறித்து விவாதம் செய்யவுள்ள உறுப்பினர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW