விளையாட்டு அமைச்சுக்கு பிரதமர் ஹரிணி விடுத்துள்ள பணிப்புரை
விளையாட்டு அமைச்சின் செலவின ஒதுக்கீடுகள் தொடர்பாக உடனடி உள்ளக கணக்காய்வுக்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பணிப்புரை விடுத்துள்ளார்.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் தலைவர்களுடன் நேற்று (27) இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது பிரதமர், தேவையற்ற அரசு செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
கணிசமான மதிப்பாய்வு
குறிப்பாக திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகளில், வீண் விரயத்தை குறைக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.
அமைச்சு, அரச ஒதுக்கீடுகள் மற்றும் செலவினங்களின் பதிவேடுகளை பராமரித்து வந்தாலும், அவற்றின் முன்னேற்றம் குறித்து கணிசமான மதிப்பாய்வு செய்யப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
இதன் விளைவாக, பயன்படுத்தப்பட்ட நிதியின் மூலம் சாதிக்கப்பட்ட விடயங்கள் என்பதை மதிப்பிடுவதற்கு உடனடி உள்ளக கணக்காய்வுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |