வரி செலுத்துவோருக்கான முக்கிய அறிவிப்பு

Sri Lanka Sri Lankan Peoples Value Added Tax​ (VAT)
By Rukshy Sep 28, 2024 02:15 AM GMT
Rukshy

Rukshy

2023/2024 மதீப்பிட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரியைச் செலுத்தல் தொடர்பில் வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை  உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ளது.

அந்த அறிக்கையில், 2023/2024 மதீப்பிட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரியைச் செலுத்தல் மற்றும் தவறுகையில் உள்ள வரியைச் செலுத்தி முடித்தல் தொடர்பில் விளக்கமளித்துள்ளது.

அபராதம் மற்றும் வட்டி தள்ளுபடி

இதன்படி, 2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கு வருமான வரியைச் செலுத்த வேண்டிய அனைத்து நபர்களும், அந்த மதிப்பீட்டாண்டுக்குரிய அனைத்து வரிமான வரியினையும் செப்டம்பர் 30 அன்று அல்லது அதற்கு முன்னதாகச் செலுத்தி முடித்தல் வேண்டும்.

வரி செலுத்துவோருக்கான முக்கிய அறிவிப்பு | Important Notice To Taxpayers

அவ்வாறு செய்யாவிடின், வருமான வரி செலுத்தாதற்கு அல்லது தாமதமாக செலுத்துவதற்கு விதிக்கப்படும் அபராதம் மற்றும் வட்டி தள்ளுபடி செய்யப்படாது அல்லது குறைக்கப்படாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.