அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு
நாட்டில் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விலைக்குறைப்பை லங்கா சதொச நிறுவனம் (Lanka Sathosa) அறிவித்துள்ளது.
இதன்படி,வெள்ளை பச்சை அரிசி, உருளைக்கிழங்கு, வெள்ளை சீனி, பருப்பு, கடலை, காய்ந்த மிளகாய், சிவப்பு கௌப்பி, பாசிப்பயறு ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது.
விலை குறைப்பு
அதன்படி, ஒரு கிலோ வெள்ளை பச்சை அரிசி - 200 ரூபாவாகவும், ஒரு கிலோ உருளைக்கிழங்கு - 215 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளை சீனி - 247 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒரு கிலோ பருப்பு - 278 ரூபாவாகவும், ஒரு கிலோ கடலை - 441 ரூபாவாகவும், ஒரு கிலோ காய்ந்த மிளகாய் - 785 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ சிவப்பு கௌப்பி - 90 ரூபாவாகவும், ஒரு கிலோ பாசிப்பயறு - 92 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |