அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை மாற்றம்! அரசாங்கத்தின் நிலைப்பாடு
எதிர்வரும் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலத்தில் அத்தியவசிய உணவுப்பொருட்களின் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்யவும், பொருட்களின் விலைகளில் கட்டுப்பாடுகளை வைத்திருக்கவும் கவனம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நிலையான உணவு முறை வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் இரண்டாவது முறையாக ஒன்று கூடியுள்ளனர்.
இதில் உணவுப்பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை தீர்மானங்களை எடுப்பது தொடர்பில் தீர்க்கமாக ஆராயப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் கொள்கை
மேலும், அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் நிலையான உணவு முறையை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் கொள்கையை வெற்றிகொள்வதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதை உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நெல் கொள்வனவு குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டதோடு நெல் கொள்வனவு செய்வதற்கு ஆலை உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் கடன் வசதிகளின் கீழ், கொள்வனவு செய்யப்படும் நெல்லின் அளவைக் கண்காணிக்க வேண்டியதன் அவசியம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதில் துல்லியமான தரவுகளும் தகவல்களும் மிக முக்கியமானவை என்றும், அவை இன்றி முடிவுகளை எடுக்கும் அபாயத்தை எதிர்கொள்ள அரசாங்கம் தயாரில்லை என்றும், துல்லியமான தரவு மற்றும் தகவல் முறைமையை உருவாக்குவதற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![Gallery](https://cdn.ibcstack.com/article/56ecd088-03d1-4379-8b82-62ea3a1215e5/25-67aad8cd72a9a.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/cfcef8a6-461f-4e22-885e-3671a2ed4ae3/25-67aad8ce22bef.webp)