வருமான வரி தொடர்பான ஜனாதிபதியின் முடிவு!
வருமான வரி தொடர்பான ஜனாதிபதி அநுர குமாரதிசாநாயக்கவினால் எடுக்கப்பட்ட முடிவானது மகிழ்ச்சி அளிப்பதாக தொழில் வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரபாத் சுகததாச ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
தொழில் நிபுணரின் சம்பள வரி விதிப்பினால் அண்மைக்காலமாக பெருந்தொகையான தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
வல்லுநர்களுக்கான வரி..
மேலும், இந்த வரி விதிப்பால் தொழில் வல்லுநர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் வேலை நிறுத்தப் போராட்டங்களை கூட நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
தொடர்ந்தும் வல்லுனர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி அவர்களின் பிரச்சினைகளை சிந்தித்து தற்போதைய அரசாங்கத்தின் வரி வரம்பை அதிகரிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தொழில் வல்லுநர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இந்த வரி முறையை நியாயப்படுத்துவதுடன் எதிர்காலத்தில் வரி முறையை தளர்த்துவதற்கான வழி மற்றும் தற்போதுள்ள வரி முறையை நியாயப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்ளவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |