ஈரானை நோக்கிச் சென்ற எண்ணெய் கப்பலை அதிரடியாக தாக்கிய அமெரிக்கா

United States of America Iran Middle East
By Sajithra Jun 03, 2026 01:12 AM GMT

ஈரானை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒரு எண்ணெய் கப்பலைத் தாக்கிச் செயலிழக்கச் செய்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு இந்த தகவலை உறுதி செய்துள்ளது.

போட்ஸ்வானாக் கொடியுடன் காணப்பட்ட எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை வீசியதாகவும், அதன் குழுவினர் தொடர்ச்சியான எச்சரிக்கைகளைப் புறக்கணித்தன் காரணமாகவே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

நேற்று இந்த எண்ணெய் கப்பல் தாக்கப்பட்டதைக் காட்டுவதாகக் கூறப்படும் காணொளி ஒன்றையும் மத்திய கட்டளை வெளியிட்டுள்ளது.

போட்ஸ்வானா கொடியுடன் சென்ற லெக்ஸி கப்பல், கார்க் தீவை நோக்கி சர்வதேச கடல்வழிப் பாதையில் பயணித்தபோது, ​​அமெரிக்கப் படைகள் அதன் மீது முற்றுகை நடவடிக்கைகளை நடைமுறைபடுத்தியதாக கூறப்படுகின்றது. 

மேலும், 24 மணி நேர காலப்பகுதியில், கப்பலின் பணியாளர்கள் அமெரிக்கப் படைகளின் அறிவுறுத்தலுக்குப் பலமுறை பின்பற்றத் தவறியதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக, முற்றுகை நடைமுறைக்கு வந்ததிலிருந்து ஆறு வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன என்றும், மேலும் 122 கப்பல்கள் திசைதிருப்பப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகின்றது.