கல்முனை யங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பினால் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு குருதிக் கொடை
அம்பாறை (Ampara) -கல்முனை யங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் அஷ்ரப் ஞாபகர்த்த வைத்தியசாலையின் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக மாபெரும் இரத்ததான முகாம் நடாத்தப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது கல்முனை கடற்கரை வீதி, அல்-புஸ்ரா ஆழ்கடல் கடற்றொாழில் சங்க காரியாலயத்தில் இன்று (20.12.2024) இடம்பெற்றுள்ளது.
குருதிக்கொடை
இதன்போது, குறித்த அமைப்பின் உயர் பீட உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கியுள்ளனர்.
இந்தநிகழ்வில், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தர முகாமைத்துவ வைத்திய அதிகாரியும், பதில் வைத்திய அத்தியட்சகருமான ஏ.ஆர்.எம்.ஹாரிஸ், பொது சுகாதாரப் பிரிவு மற்றும் திட்டமிடல் பிரிவு வைத்திய அதிகாரி ஏ.எல். பாறூக் ஆகியோருடன் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ரீ. மருதராஜன், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கல்முனை கிளை தலைவர் மெளலவி முர்ஷித் முப்தி ஆகியோரும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





