மத்திய அதிவேக நெடுஞ்சாலையை நிறைவு செய்ய ஜப்பானிடம் உதவி கோரிய ஜனாதிபதி
மத்திய அதிவேக நெடுஞ்சாலையினை முழுமையாக நிறைவு செய்ய ஜப்பாானிடம் உதவி கோரியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று ( 02) கண்டியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கண்டியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இடைநிறுத்தப்பட்ட பணிகள்
தொடர்ந்து உரையாற்றுகையில்,
அதுமட்டுமன்றி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களையும் மீள ஆரம்பிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
இடைநிறுத்தப்பட்ட குட்செட் பேருந்து நிலையம் போன்ற திட்டங்களும், கடுகஸ்தோட்டை, பேராதனை, தென்னகும்பர ஆகிய இடங்களிலும் பேருந்து முனையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தது.
விரைவில் அனைத்து கட்டுமானப்பணிகளும் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுர குமாரதிசா நாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |