ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தோப்பூர் மத்திய குழுவினருடன் எம்.எஸ்.தௌபீக் கலந்துரையாடல்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரமதாசவினை வெற்றிபெறச் செய்வதற்கான தேர்தல் முன்னெடுப்புக்கள் தொடர்பாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தோப்பூர் மத்திய குழுவினருடன் எம்.எஸ்.தௌபீக் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
இந்த கலந்துரையாடலானது நேற்று (22) கட்சியின் தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.தௌபீக் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான றிபாஸ், ஆப்தீன் மற்றும் ஏனைய மத்திய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி தேர்தல்
இலங்கை ஜனாதிபதி தேர்தல் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சியால் எடுக்கப்பட்ட தீர்மானங்களைப் பொருட்படுத்தாத காரணத்தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |