ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் மாரடைப்பால் உயிரிழப்பு

Sri Lanka Politician Election
By Dhayani Aug 23, 2024 12:22 AM GMT
Dhayani

Dhayani

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்திருந்த 79 வயதுடைய ஐதுருஸ் முஹம்மது இல்யாஸ் காலமானார்.

இந்தத் தகவலை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

திடீரென சுகயீனமடைந்த ஜனாதிபதி வேட்பாளரான ஐதுருஸ் முஹம்மது இல்யாஸ், புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்றிரவு காலமானதாக கூறப்படுகிறது.

அரச பணியாளர்களின் வேதன அதிகரிப்பு! அமைச்சரவை வழங்கியுள்ள அங்கீகாரம்

அரச பணியாளர்களின் வேதன அதிகரிப்பு! அமைச்சரவை வழங்கியுள்ள அங்கீகாரம்

 

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் மாரடைப்பால் உயிரிழப்பு | President Cantined Illyas Dies Of Heart Failure

ஜனாதிபதி வேட்பாளர்களின் எண்ணிக்கை

இல்லியாஸ் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசாங்கத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 இல்லியாஸின் திடீர் மரணத்தால், ஜனாதிபதி வேட்பாளர்களின் எண்ணிக்கை 38 ஆக குறைந்துள்ளது.

பாடசாலைகளில் புதிய திட்டம்: அமைச்சரவை அங்கீகாரம்

பாடசாலைகளில் புதிய திட்டம்: அமைச்சரவை அங்கீகாரம்

எரிபொருள் மற்றும் உரத்திற்கு மானியம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

எரிபொருள் மற்றும் உரத்திற்கு மானியம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம்


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW