அரச பணியாளர்களின் வேதன அதிகரிப்பு! அமைச்சரவை வழங்கியுள்ள அங்கீகாரம்

Government Employee Sri Lanka Cabinet Money
By Mayuri Aug 22, 2024 12:03 PM GMT
Mayuri

Mayuri

2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து அரச பணியாளர்களதும் அடிப்படை வேதனத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பொதுச் சேவைத் துறையினரின் வேதன பிரச்சினைகள் தொடர்பான நிபுணர்கள் குழுவின் தலைவர் உதய செனவிரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கப்படும் வேதனம்

பாடசாலைகளில் புதிய திட்டம்: அமைச்சரவை அங்கீகாரம்

பாடசாலைகளில் புதிய திட்டம்: அமைச்சரவை அங்கீகாரம்

இதன்படி 2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் கடைநிலை அரச பணியாளர்களின் அடிப்படை வேதனம் 24 சதவீதத்தினாலும், உயர்நிலையில் உள்ள அரச பணியாளர்களின் வேதனம் அவர்களின் தகுதிகளுக்கு அமைய 24 முதல் 50 சதவீதம் வரையிலும் அதிகரிக்கப்படவுள்ளது.

அரச பணியாளர்களின் வேதன அதிகரிப்பு! அமைச்சரவை வழங்கியுள்ள அங்கீகாரம் | Salary For Government Workers

அதேநேரம் நிலவும் பணவீக்கத் தன்மை மற்றும் பொருளாதார நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, 2025 ஜனவரி முதல் அரச பணியாளர்களின் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை 25,000 ரூபாவாக அதிகரிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக உதய செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.

புத்தளத்தில் மாயமான நபர் காட்டுக்குள் இருந்து சடலமாக மீட்பு

புத்தளத்தில் மாயமான நபர் காட்டுக்குள் இருந்து சடலமாக மீட்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW