சீனாவை சென்றடைந்த ஜனாதிபதி
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் சீனாவிற்கு அரச விஜயம் ஒன்றை மேற்கொண்டு சென்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இன்று (14) உள்ளூர் நேரப்படி காலை 10.25 மணியளவில் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அங்கு சீன துணை வெளியுறவு அமைச்சர் சென் சியாடோங் சீன ராணுவத்தின் மரியாதையுடன் அதிபரை வரவேற்றுள்ளார்.
சீனா விஜயம்
இந்த சீன விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தொழில்நுட்ப மற்றும் விவசாய அபிவிருத்தி மற்றும் வறுமை ஒழிப்பு போன்றவற்றை இலக்காகக் கொண்ட பல களப்பயணங்களில் பங்கேற்க உள்ளார்.
இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில் பல இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |