ஜனாதிபதி அநுரவின் 56வது பிறந்த நாள் இன்று...

Anura Kumara Dissanayaka Sri Lanka President of Sri lanka Presidential Update
By Rakshana MA Nov 24, 2024 05:03 AM GMT
Rakshana MA

Rakshana MA

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ( Anura Kumara Dissanayake ) இன்றைய தினம் தனது 56 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்.

இவர் இலங்கையின் மத்திய மாகாணத்தில் மாத்தளை மாவட்டம் கலேவலை என்னும் ஊரில் 1968 நவம்பர் 24 இல் பிறந்தார்.

மேலும் அநுர குமார தனது பாடசாலைக் கல்வியை தம்புத்தேகமை காமினி மகா வித்தியாலயத்திலும், தம்புத்தேகமை மத்திய கல்லூரியிலும் கற்றார்.

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சர்வதேச அரபு மொழிகள் தினம்

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சர்வதேச அரபு மொழிகள் தினம்

தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்

தனது பாடசாலையில் இருந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான முதலாவது மாணவராக விளங்கிய இவர் பாடசாலை நாட்களில் இருந்தே மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாட்டாளராக இருந்ததோடு, அக்கட்சியில் 1987இல் இணைந்து, மாணவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

president anura kumara dissanayake 56th birthday

அத்துடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நுழைந்த அவர் சில மாதங்களுக்குப் பிறகு அச்சுறுத்தல் காரணமாக வெளியேறி ஓராண்டு கழித்து 1992 இல் களனி பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டு, 1995 இல் இளம் அறிவியல் பட்டத்துடன் வெளியேறினார்.

தொடர்ந்தும் 2000இல் நாடாளுமன்றத் தேர்தலை அடுத்து கட்சியின் தேசியப் பட்டியலில் நாடாளுமன்றம் சென்றார். 2001 தேர்தலில் மீண்டும் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினரானார்.

பின்னர் செப்டம்பர் 2015 முதல் டிசம்பர் 2018 வரை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் தலைமைக் கொறடாவாகப் பணியாற்றினார்.

நாட்டு மக்களோடு ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்: செல்வம் அடைக்கலநாதன் எம்.பி

நாட்டு மக்களோடு ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்: செல்வம் அடைக்கலநாதன் எம்.பி

9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி

2014 பெப்ரவரி 2 அன்று, மக்கள் விடுதலை முன்னணியின் 17ஆவது தேசிய மாநாட்டின் போது, சோமவன்ச அமரசிங்கவிற்குப் பின், கட்சியின் புதிய தலைவராக அநுரகுமார திசாநாயக்க நியமிக்கப்பட்டார்.

2019 ஓகஸ்ட் 18ஆம் திகதியன்று, மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான அரசியல் கூட்டமைப்பான தேசிய மக்கள் சக்தி, 2019 ஜனாதிபதி தேர்தலில் அநுர தனது ஜனாதிபதி வேட்பாளராக இருப்பார் என்று அறிவித்தது.

ஜனாதிபதி அநுரவின் 56வது பிறந்த நாள் இன்று... | President Anura S Birthday

இத்தேர்தலில் திசாநாயக்க 418,553 (3%) வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்றார்.

மீண்டும் 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு 5,634,915 வாக்குகளைப் பெற்று இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகக் காணப்படுகிறார்.

முஸ்லிம் காங்கிரசின் புதிய உறுப்பினர் அறிவிப்பு!

முஸ்லிம் காங்கிரசின் புதிய உறுப்பினர் அறிவிப்பு!

அநுரவால் மாறிய இலங்கை அரசியலின் புதிய பரிமாணம்!

அநுரவால் மாறிய இலங்கை அரசியலின் புதிய பரிமாணம்!

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW