நாட்டு மக்களோடு ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்: செல்வம் அடைக்கலநாதன் எம்.பி

Anura Kumara Dissanayaka Selvam Adaikkalanathan Northern Province of Sri Lanka General Election 2024 National People's Power - NPP
By Laksi Nov 23, 2024 09:03 PM GMT
Laksi

Laksi

நாங்கள் ஒன்றிணைந்தால் மக்கள் எங்களோடு நிற்பார்கள் என்பதை தேர்தல் மூலம் சொல்லியிருக்கிறார்கள். எனவே இனியாவது ஒன்று படவேண்டும் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அவரது அலுவலகத்தில் இன்று (23.11.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது தேசிய மக்கள் சக்தி மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருப்பதாக தெரிகிறது.

மக்களின் எதிர்பார்ப்பை இந்த அரசாங்கம் தீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காலம் தான் பதில் சொல்லவேண்டும்.

முஸ்லிம் காங்கிரசின் புதிய உறுப்பினர் அறிவிப்பு!

முஸ்லிம் காங்கிரசின் புதிய உறுப்பினர் அறிவிப்பு!

தேசிய இனப் பிரச்சனை

ஜனாதிபதியின் அக்கிராசன உரையில் தேசிய இனப் பிரச்சனை தொடர்பாக பேசாமை வருத்தமளிக்கிறது.

விவசாயிகள், கடற்தொழிலாளிகள், ஏழை மக்களின் பொருளாதாரம் தொடர்பாக அவரால் சொல்லப்பட்ட கருத்தை வரவேற்கின்றேன். அனைவரும் இலங்கையர்கள் என்ற அடிப்படையிலேயே அவரது செயற்பாடு இருக்கிறது.

நாட்டு மக்களோடு ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்: செல்வம் அடைக்கலநாதன் எம்.பி | More People Over Npp Hope S Adaikalanathan

எங்களை பொறுத்த வரை நாம் பல விலைகளை கொடுத்திருக்கிறோம். எனவே இனப் பிரச்சனை விடயத்தில் அரசாங்கம் என்ன நிலைப்பாட்டில் உள்ளது என்பதை தெளிவாக கூறவேண்டும். புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் போது 13 ஆவது திருத்தமும் இல்லாமல் செய்யப்படும் என்ற நிலை வரலாம் என கூறப்படுகின்றது.

எனவே நல்ல விடயங்களை ஆதரிப்போம் மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் நிலை தொடர்ந்தால் அதனை நாம் கடுமையாக எதிர்ப்போம்.

நாங்கள் ஒற்றுமையாக இருந்திருந்தால் இந்த ஆசனங்கள் தேசிய மக்கள் சக்திக்கு சென்றிருக்காது. தமிழ்க் கட்சிகளுக்கு விழுந்த வாக்குகளை பார்த்தால் அது புலப்படும்.

சம்மாந்துறையில் இளைஞர்களுக்கான சமூக நல்லிணக்கம்: கப்சோவின் நிகழ்வு!

சம்மாந்துறையில் இளைஞர்களுக்கான சமூக நல்லிணக்கம்: கப்சோவின் நிகழ்வு!

மக்களின் வாக்குகள் 

யாழில் டக்ளஸ் மற்றும் அங்கஜன் ஆகியோரது வாக்குகளே தேசிய மக்கள் சக்திக்கு சென்றுள்ளது. தேசியத்தை நேசிக்கின்ற மக்களின் வாக்குகள் அவர்களுக்கு செல்லவில்லை.

நாட்டு மக்களோடு ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்: செல்வம் அடைக்கலநாதன் எம்.பி | More People Over Npp Hope S Adaikalanathan

எனவே, இனிவரும் காலங்களிலும் நாங்கள் ஒன்றிணையவில்லை என்றால், வடக்கு - கிழக்கில் அரசாங்கம் ஆளும் சந்தர்ப்பத்தை உருவாக்கிய தவறை நாங்கள் விட்டவர்களாக இருக்கப் போகிறோம். அந்த நிலையை மாற்றி இனியாவது ஒன்றாக செயற்படவேண்டும். நான் அதில் முனைப்பு காட்டுகின்ற ஒருவன் மக்களும் அதையே எதிர்பார்க்கின்றனர் என்றார்.

அநுரவின் திட்டங்களுக்கு ரணில் தரப்பில் இருந்து வந்த ஆதரவு

அநுரவின் திட்டங்களுக்கு ரணில் தரப்பில் இருந்து வந்த ஆதரவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW