வாகன இறக்குமதிக்கு அனுமதி: வெளியான விசேட வர்த்தமானி

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Sri Lanka Economy of Sri Lanka vehicle imports sri lanka
By Laksi 9 days ago
Laksi

Laksi

புதிய இணைப்பு

வாகன இறக்குமதி குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

2024 டிசம்பர் 14ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 

முதலாம் இணைப்பு

அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் தனியார் பாவனைக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

இன்றைய (18) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் படிப்படியாக அகற்றப்பட வேண்டியது அவசியம்.

2028இல் எமது அரசாங்கமே ஆட்சி அமைக்கும்: ஜனாதிபதி அறிவிப்பு

2028இல் எமது அரசாங்கமே ஆட்சி அமைக்கும்: ஜனாதிபதி அறிவிப்பு

வாகன இறக்குமதி

வாகன இறக்குமதியைக் கொண்டு ஒரு தொழிற் துறை உள்ளது. தொழில் முனைவோர் உள்ளனர். எனவே வாகன இறக்குமதியை நீண்ட காலத்திற்கு தடை செய்ய முடியாது.

வாகன இறக்குமதிக்கு அனுமதி: வெளியான விசேட வர்த்தமானி | President Anura Approves Vehicle Import In 2025

இதன்படி மூன்று கட்டங்களாக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

பயணிகள் போக்குவரத்துக்கான வாகனங்கள், சிறப்பு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள் மற்றும் தனியார் பயன்பாட்டிற்கான வாகனங்கள் உள்ளிட்டவை கட்டம் கட்டமாக இறக்குமதி செய்யப்படும் என  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராக நிஸாம் காரியப்பர் பதவிப்பிரமாணம்

நாடாளுமன்ற உறுப்பினராக நிஸாம் காரியப்பர் பதவிப்பிரமாணம்

விலை அதிகரிப்பு

இதேவேளை, இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர், சுற்றுலா வகை வாகனங்களுக்கான டொயோட்டா லங்கா வாகனங்களின் முதல் தொகுதி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கு அனுமதி: வெளியான விசேட வர்த்தமானி | President Anura Approves Vehicle Import In 2025

மேலும்,அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக இலங்கைக்கான வாகன இறக்குமதி சுமார் நான்கு வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இதனால் இந்நாட்டில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் விலைகள் அசாதாரணமாக உயர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் கல்வித் தகைமைகளை சமர்ப்பித்த சஜித்

நாடாளுமன்றத்தில் கல்வித் தகைமைகளை சமர்ப்பித்த சஜித்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW