வானிலை மாற்றத்தினால் மேலும் ஒத்திவைக்கப்படும் இரண்டு பரீட்சைகள்

Ministry of Education Sri Lanka Department of Examinations Sri Lanka Education
By Rakshana MA Nov 28, 2024 02:09 PM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக உயர்தரப்பரீட்சைகள் பிற்போடப்பட்டதுடன் மேலும் இரண்டு அரச பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amith Jayasundara) தெரிவித்துள்ளார்.

குறித்த தகவலை இன்று(28) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,

காலநிலை மாற்றத்தால் 37 குளங்களின் வான்கதவுகள் திறப்பு

காலநிலை மாற்றத்தால் 37 குளங்களின் வான்கதவுகள் திறப்பு

பிற்போடப்படும் பரீட்சைகள்

2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை சட்டக் கல்லூரி பொது நுழைவுப் பரீட்சை மற்றும் சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட புள்ளிவிபரவியலாளர்கள்(Bar Examination for Senior Statisticians / Statisticians) முதலாவது வினைத்திறன் காண் பரீட்சை – 2016 (2024) என்பன பிற்போடப்பட்டுள்ளது.

வானிலை மாற்றத்தினால் மேலும் ஒத்திவைக்கப்படும் இரண்டு பரீட்சைகள் | Postponed Exams From Srilanka Exam Department 2024

எனினும் இந்த பரீட்சைகள் டிசம்பர் 01 மற்றும் 02 ஆம் திகதிகளில் திட்டமிடப்பட்டிருந்ததாகவும், நாட்டின் பல பாகங்களில் இருந்து பரீட்சார்த்திகள் பரீட்சைகளுக்காக கொழும்புக்கு சமூகமளிக்க இருந்ததாகவும் கூறினார்.

தொடர்ந்தும் சீரற்ற காலநிலையினால் பல்வேறு பிரதேசங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளமையினால், இரண்டு பரீட்சைகளையும் ஒத்திவைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் பரீட்சைகளின் மீள் திட்டமிடப்பட்ட திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும்." எனவும் அமித் ஜயசுந்தர தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

அஸ்வெசும கொடுப்பனவுக்காக விண்ணப்பிக்கும் மக்களுக்கு வெளியான அறிவித்தல்

அஸ்வெசும கொடுப்பனவுக்காக விண்ணப்பிக்கும் மக்களுக்கு வெளியான அறிவித்தல்

தங்க விலையில் திடீர் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்

தங்க விலையில் திடீர் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW