தபால்மூல வாக்காளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Presidential Election 2024
By Rukshy Aug 04, 2024 02:45 AM GMT
Rukshy

Rukshy

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தபால்மூல வாக்காளர்களின் விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை நாளையுடன் (05) நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

விண்ணப்ப படிவத்தை பூரணப்படுத்துவதற்காக வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலநிலை தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு

காலநிலை தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு

தேர்தல் அதிகாரிகள்

இதேவேளை 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தபால்மூல வாக்காளர்களின் வசதிக்காக, வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால்மூல வாக்காளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு | Postal Voters Application Deadline

இதற்கமைய, தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், குறித்த விண்ணப்பதாரர்கள், நாளை 5ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குள் உரிய மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

மேலும், குறித்த திகதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனையின்றி நிராகரிக்கப்படும் என தேர்தல் ஆணைக்கு தலைவர் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

துருக்கியில் இன்ஸ்டாகிராமிற்கு தடை

துருக்கியில் இன்ஸ்டாகிராமிற்கு தடை

பராசூட் சாகசத்தில் இரு இராணுவ வீரர்கள் படு காயம்

பராசூட் சாகசத்தில் இரு இராணுவ வீரர்கள் படு காயம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW