வேலைநிறுத்தத்தில் குதித்த அஞ்சல் தொழிற்சங்கங்கள்
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அஞ்சல் தொழிற்சங்கங்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.
குறித்த போராட்டம் இன்று (22) கொழும்பில் உள்ள மத்திய அஞ்சல் பரிமாற்றத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் தொழிலாளர் போராட்ட மையம் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சத்தியாக்கிரகப் போராட்டம்
இந்தநிலையில், காலை ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் காரணமாக மத்திய தபால் நிலையத்தைச் சுற்றி விசேட காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பார்சல்களை அனுப்பத் தயாராகும் ஊழியர்களின் கடமைகளுக்கு சில நபர்கள் இடையூறு விளைவித்ததால், கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்றத்திற்கு காவல்துறையினர் தற்போது அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





