பதவி விலகல் தொடர்பான செய்திக்கு பதிலளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

Police spokesman Sri Lanka Police Buddhika Manatunga
By Benat Mar 21, 2025 07:32 AM GMT
Benat

Benat

பொலிஸ் செய்தித் தொடர்பாளர் புத்திக மனதுங்க, தான் பதவி விலகவில்லை என்று தெரிவித்துள்ளார். 

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தான் இடமாற்றம் கோரியதாகவும், ஊடக அறிக்கைகளில் கூறப்படுவது போல் பதவி விலகவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். 

முப்படைகளில் இருந்து தப்பியோடிய பலர் கைது

முப்படைகளில் இருந்து தப்பியோடிய பலர் கைது

இடமாற்றம் கோரல் 

இதன்போது, புத்திக மனதுங்க, தனிப்பட்ட காரணங்களுக்காக தான் இடமாற்றம் கோரியதாக தெளிவுபடுத்தினார்.

பதவி விலகல் தொடர்பான செய்திக்கு பதிலளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் | Police Spokesman Buddhika Manatunga Resignation

மேலும், "நான் இடமாற்றத்திற்கான கோரிக்கையை சமர்ப்பித்துள்ளேன். தேசிய பொலிஸ் ஆணையம் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளால் பொருத்தமான நியமனம் செய்யப்படும் வரை, நான் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் பதவியில் தொடர்ந்து பணியாற்றுவேன்” என்று அவர் விளக்கமளித்துள்ளார். 

இந்நிலையில், நேற்றைய தினம், பொலிஸ் செய்தித் தொடர்பாளர் புத்திக மனதுங்க பதவி விலகியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தன. 

விபத்துக்கு உள்ளான இலங்கை விமானப்படை பயிற்சி விமானம்

விபத்துக்கு உள்ளான இலங்கை விமானப்படை பயிற்சி விமானம்