மூன்று மாதங்களில் பதிவான மரணங்கள் தொடர்பில் பொலிஸ் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்

Police spokesman Sri Lanka Police Sri Lankan Peoples Accident
By Rakshana MA Apr 04, 2025 08:29 AM GMT
Rakshana MA

Rakshana MA

ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாதங்களில் மாத்திரம் 565 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் விளைவாக 592 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டில் வாகன விபத்துகளைக் குறைப்பதற்காக கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பிரதானி, பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்திக ஹபுகொட இதனைத் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் பட்டத் திருவிழா

மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் பட்டத் திருவிழா

விபத்து மரணங்கள் 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பல்வேறு தேவைகளுக்காக வீடுகளை விட்டு வெளியேறிச் செல்லும் 7 முதல் 8 பேர் வரை நாளாந்தம் போக்குவரத்து விபத்துகளில் சிக்கி உயிரிழக்கின்றனர்.

அத்தோடு கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையான நிலவரப்படி, மோட்டார் வாகன ஆணையாளர் காரியாலயத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 84 இலட்சத்து 54,513 ஆகும். இவற்றுள் 49 இலட்சத்து 22,000 மோட்டார் சைக்கிள்கள் ஆகும்.

மூன்று மாதங்களில் பதிவான மரணங்கள் தொடர்பில் பொலிஸ் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல் | Police Report 565 Fatalities In 3 Months

இரண்டாவது அதிகமாகப் பதிவுசெய்யப்பட்ட வாகனம் முச்சக்கர வண்டிகள், இது 11 இலட்சத்து 85,000 ஆகும். நாட்டில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாகனங்களில் 72 வீதமானவை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் என்றும், இதன் விளைவாக, இந்த வாகனங்களே அதிக விபத்துக்களை சந்தித்து வருகின்றது.

மொத்தமாக, 2023 ஆம் ஆண்டில் 2,231 அபாயகரமான வீதி விபத்துகள் நடந்துள்ளன, அவற்றில் 2,341 உயிரிழப்புகள் இடம்பெற்றிருந்தன. மேலும், 2024 ஆம் ஆண்டில் நிகழ்ந்த 2,403 விபத்துகளில், 2,521 பேர் மரணித்துள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆதம்பாவா எம்.பியின் கருத்துக்கு வலுக்கும் கண்டனம்!

ஆதம்பாவா எம்.பியின் கருத்துக்கு வலுக்கும் கண்டனம்!

ஜனாதிபதி நிதியத்தில் மோசடி செய்தவர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்

ஜனாதிபதி நிதியத்தில் மோசடி செய்தவர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW