பொதுத் தேர்தல்: பாதுகாப்பு கடமைகளில் பொலிஸ் அதிகாரிகள்
எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு இன்று (12) முதல் பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அத்தோடு, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் சுமார் 64,000 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 13,314 தொகுதிகளுக்கு மொத்தம் 13,383 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு பணி
இந்த காலப்பகுதியில் பாதுகாப்பிற்காக தேர்தல் நடைபெறும் நாளிலும் அதற்குப் பின்னரும், தேவைப்பட்டால், அதற்குப் பிறகும் பொலிஸ் அதிகாரிகளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 64,000 பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும், 3,200 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். 12,227 சிவில் பாதுகாப்பு பணியாளர்கள் நேரடியாக தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ளனர்.
தேர்தல் பணி
இதுதவிர, தேர்தல் பணிகளுக்கு பொலிஸ் அதிகாரிகளை பயன்படுத்துவதனால் முக்கிய இடங்களின் பாதுகாப்புக்காக 11,000 இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும், ஏதேனும் தேவை ஏற்பட்டால் இராணுவ அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.
சுதந்திரமானதும் அமைதியானதுமான தேர்தலை நடாத்துவதற்கு தேவையான ஆதரவை வழங்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்வதாகவும் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |