பொதுத் தேர்தலில் மை பூசும் விரலில் மாற்றம்: வெளியான அறிவிப்பு

Election Commission of Sri Lanka Sri Lanka General Election 2024
By Laksi Nov 11, 2024 10:38 AM GMT
Laksi

Laksi

எதிர்வரும் நவம்பர் மாதம்14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிப்பின் போது, இடது கையின் ஆள்காட்டி விரலில் மை பூசப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க(SamanRatnayaka) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இந்த முறை வாக்காளர்களின் சிறிய விரலில் மை பூசப்பட மாட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மின்சார கட்டணம் குறைப்பது தொடர்பில் வெளியான தகவல்

மின்சார கட்டணம் குறைப்பது தொடர்பில் வெளியான தகவல்

மை அடையாளங்கள்

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,  "கடந்த ஜனாதிபதி தேர்தலில் இடது கையின் சிறிய விரலுக்கு மை பூசினோம்.பலருக்கு இன்னும் மை அடையாளங்கள் உள்ளன.எனவே, இம்முறை இடது கையின் ஆள்காட்டி விரலை குறியிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

பொதுத் தேர்தலில் மை பூசும் விரலில் மாற்றம்: வெளியான அறிவிப்பு | General Elections A Change In The Ink Finger

மேலும், நவம்பர் 14ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான அனைத்து முதற்கட்டப் பணிகளும் நிறைவடைந்துள்ளதாகவும் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரங்கள் தொடர்பில் வெளியான தகவல்

தேர்தல் பிரசாரங்கள் தொடர்பில் வெளியான தகவல்

பிரசார நடவடிக்கைகள் 

அத்துடன், தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் இன்று (11) நள்ளிரவுடன் நிறைவடையும்.இன்னும் 3 நாட்களில் இடம்பெறவுள்ள  பொதுத் தேர்தலில் 17,140,354 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

பொதுத் தேர்தலில் மை பூசும் விரலில் மாற்றம்: வெளியான அறிவிப்பு | General Elections A Change In The Ink Finger

அத்துடன், இந்த வருட தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழுவொன்று ஏற்கனவே இலங்கைக்கு வருகைதந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளுக்கு பூட்டு

நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளுக்கு பூட்டு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW