பேருந்து மோதியதில் பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

Sri Lankan Peoples Eastern Province Accident
By Rakshana MA Apr 05, 2025 10:08 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியின் கல்லேல்ல பகுதியில், நேற்று(04) இரவு இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிர் இழந்துள்ளார்.

பொலன்னறுவை பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் 55 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிர் இழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

வரி பற்றி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் இலங்கை அரசு

வரி பற்றி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் இலங்கை அரசு

பேருந்து விபத்து

குறித்த நபர் தனது நண்பர்களுடன் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது பேருந்து மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து மோதியதில் பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு | Police Officer Killed In Bus Crash At Batticaloa

விபத்தின் பின்னர் பேருந்தின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

10 கோடி பெறுமதியான கையடக்கதொலைபேசிகளுடன் காத்தான்குடி நபர் கைது

10 கோடி பெறுமதியான கையடக்கதொலைபேசிகளுடன் காத்தான்குடி நபர் கைது

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு மருத்துவ தளபாடங்கள் கையளிப்பு

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு மருத்துவ தளபாடங்கள் கையளிப்பு

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW