கல்முனையில் பாடசாலை கவின் கலைப் போட்டி
கல்முனை (Kalmunai) இஸ்லாமாபாத் மகா வித்தியாலயத்தில் வகுப்பறைக் கவின் கலைப்போட்டி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம்.றிசாத் தலைமையில் நடைபெற்றுள்ளது.
ஆசிரியர்கள், மாணவர்களின் கற்பித்தல், கற்றல் செயற்பாடுகளில் உளரீதியான மனப்பாங்குகளை மாற்றமடையச் செய்யும் நோக்குடன் வருடா வருடம் குறித்த போட்டி இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவின் கலைப்போட்டி
இதற்கமைய, கல்முனை கல்வி வலயத்தின் ஆரம்ப பிரிவு கவின் கலை போட்டி விதிமுறைகளுக்கு அமைவாக, தரம் 1 தொடக்கம் தரம் 5 வரை இந்த போட்டி நடைபெற்றுள்ளது.
இப்போட்டியில் பாடசாலையின் ஆரம்பப் பிரிவு ஆசிரிய ஆலோசகர் ஐ.எல்.அப்துல் ரஹ்மான், ஆரம்பப் பிரிவு வளவாளர் எம்.எம்.ஏ.ஹபீழ் ஆகியோர் பார்வையிட்டு மதிப்பீடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
அத்தோடு பாடசாலையின் பிரதி அதிபர் எம்.ரீ.ஏ.முனாப், மற்றும் பாடசாலை முகாமைத்துவ குழுவின் சிரேஷ்ட ஆசிரியர் முஜிப்டீன் ஆகியோர் இணைந்து இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |