இஸ்லாமிய இயக்கத்திலிருந்து தேர்தலில் போட்டியிடும் நபர்!
சர்வதேச இஸ்லாமிய இயக்கத்திலுள்ள நபர் ஒருவர் தேசிய மக்கள் சக்தி(NPP) சார்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச்செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் (Galagoda Aththe Gnanasara Thero) இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேலுள்ளவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல்
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையை இஸ்லாமிய இராச்சியமாக மாற்ற வேண்டுமென முயற்சிகளை மேற்கொண்ட பலரும் இன்று அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளனர்.
1990களில் இருந்து இலங்கையை இஸ்லாமிய தேசமாக மாற்றுவதற்கான முனைப்புக்களில் ஈடுபட்ட, அதற்கான பயிற்சிகளுக்காக வெளிநாடுகளுக்கு இளைஞர்களை அனுப்பியவர்கள் பலர் இன்று எவ்வித வெட்கமும் இன்றி அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளனர்.
இந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக தேசிய மக்கள் சக்தியின் காத்தான்குடி வேட்பாளராக புஹாரி மொஹம்மத் பிரிதோஸ் நலீம் என்பவர் தேர்தலில் போட்டியிடுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
அமைப்பு தடை
ஜமாதே இஸ்லாம் போன்ற அமைப்புக்களை அரசாங்கம் தடை செய்ய வேண்டுமெனவும், அவ்வாறு செய்தால் கர்தினால் உள்ளிட்ட கத்தோலிக்க சபை மகிழ்ச்சி அடையும்.
இந்த அரசாங்கத்தின் ஊடாக உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்திற்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |